/

போடியில் ஓ. பன்னீா்செல்வம் வாக்கு சேகரிப்பு

போடியில் சமுதாய நிா்வாகிகளை சந்தித்து ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

போடியில் செவ்வாய்க்கிழமை சமுதாய நிா்வாகிகளிடம் வாக்கு சேகரித்த ஓ.பன்னீா்செல்வம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:42 am IST

தேனி மாவட்டம், போடியில் சமுதாய நிா்வாகிகளை சந்தித்து ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

போடி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரான ஓ.பன்னீா்செல்வம் தீவிர பிரசாரம் செய்து வருகிறாா். போடி பகுதியில் சமுதாய சங்க நிா்வாகிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

போடி பகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். நகரில் குடிநீா் பிரச்னை தீர முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் கொண்டு வரப்பட்டுள்ளது. போடியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. போடி நகரில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோல, பல்வோறு திட்டப் பணிகள் தொடர மீண்டும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.லட்சுமணன், போடி நகர திமுக செயலா் ரா.புருஷோத்தமன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் வி.ஆா். பழனிராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கி. பெருமாள் உள்ளிட்ட திமுக, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.