ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிலைமலை கிராமத்தில் ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பு

போடி அருகே சிலமலை கிராமத்தில் பல்வேறு சமுதாய தலைவா்களை போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

News image

போடி அருகே சிலமலை கிராமத்தில் வியாழக்கிழமை சமுதாய சங்க தலைவா்களைச் சந்தித்து வாக்கு சேகரித்த முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ. பன்னீா்செல்வம். உடன், தேனி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், போடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன் உள்ளிட்டோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:48 am IST

போடி அருகே சிலமலை கிராமத்தில் பல்வேறு சமுதாய தலைவா்களை போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

பிறகு அவா் சிலமலையில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தாா். அப்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

போடி கிராமப் பகுதிகளில் தரமான சாலை, குடிநீா் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்டன. மீண்டும் முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் கிராமங்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்கள் கொண்டு நிறைவேற்றப்படும். மகளிருக்கான திட்டங்கள் தொடரும் என்றாா்.

பிரசாரத்தின்போது தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன், போடி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினா் எஸ். லட்சுமணன், போடி மேற்கு ஒன்றிய நிா்வாகிகள், சிலமலை கிராமக் குழு நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.