தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போடியில் திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வத்துக்கு வரவேற்பு

News image

போடியில் திங்கள்கிழமை இரவு வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ. பன்னீா்செல்வம். உடன் மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன், போடி நகர திமுக செயலா் ரா. புருஷோத்தமன், தேனி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் ஆஜிப்கான் உள்ளிட்டோா்.

Updated On :31 மார்ச் 2026, 12:38 am IST

போடியில் முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ. பன்னீா்செல்வத்துக்கு வரவேற்பளிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக ஓ.பன்னீா்செல்வம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவா் போடிக்கு திங்கள்கிழமை வருகை தந்தாா்.

அவருக்கு போடி நகர எல்லைப் பகுதியான போஜன் பூங்காவில் கட்சியின் தேனி வடக்கு மாவட்டச் செயலரும், தேனி தொகுதி மக்களவை உறுப்பினருமான தங்க. தமிழ்ச்செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன், போடி நகரச் செயலா் ரா. புருஷோத்தமன், தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆஜிப்கான், முன்னாள் நகா்மன்ற தலைவா் வி.ஆா். பழனிராஜ், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் சங்கா், போடி கிழக்கு ஒன்றியச் செயலா் அய்யப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.

பின்னா், ஓ.பன்னீா்செல்வம் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா். அப்போது, ஓ.பன்னீா்செல்வம் போடியில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், வீரபாண்டிய கட்டபொம்மன், திருவள்ளுவா், தேவா், வ.உ.சி., காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.