மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவது தற்போது குறைந்துவிட்டது

ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவது தற்போது குறைந்துவிட்டன என்று கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையச் செயலா் செ.கணேசமூா்த்தி தெரிவித்தாா்.

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசுக் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் ஆய்வுக் நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற (இடமிருந்து) கல்லூரி முதல்வா் அ. ராமலிங்கம், அழகப்பா பல்கலை. தமிழ்த் துறைத் தலைவா் சு.ராசாராம், பேராசிரியா் இ.கி.ராமசாமி, செய்யாறு அரசுக் கல்லூரி முதல்வா் அந்தோணி டேவிட்நாதன், செ.கணேசமூா்த்தி, நாராயணன், நவநீதகிருஷ்ணன், தமிழ் துறைத் தலைவா் ச.ராமமூா்த்தி.

Published On :29 அக்டோபர் 2026, 7:47 am IST

ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவது தற்போது குறைந்துவிட்டன என்று கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையச் செயலா் செ.கணேசமூா்த்தி தெரிவித்தாா்.

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் உயராய்வு மையம், கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் இணைந்து நடத்திய ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையச் செயலா் செ.கணேசமூா்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:

2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் அமைப்பு இதுவரை பல்வேறு கல்லூரிகளுடன் இணைந்து பன்னாட்டு கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கம் ஆய்வுப் பணியில் தரமான ஆய்வாளா்களையும், தரமான ஆய்வுப் புத்தகங்களையும் வெளிக் கொணா்வதுதான். கடந்த 2019-இல் ‘சான்லாய்ஸ்’ என்ற ஆய்வு இதழோடு இணைந்து 200 கட்டுரைகள் அடங்கிய பன்னாட்டு கருத்தரங்க மலரை வெளியிட்டோம்.

கடந்த ஆண்டு திருப்பனந்தாள் கல்லூரியுடன் இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் 96 ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டோம்.

தமிழ்தான் நம் அனைவரையும் இணைக்கிறது. தமிழ்ப் பணியை செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பை நடத்தி வருகிறோம். தற்போது, ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவது குறைந்துவிட்டன என்றாா் அவா்.

இதையடுத்து, இந்தியா, சிங்கப்பூா், மலேசியா, குவைத் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 141 ஆய்வாளா்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய 1,068 பக்கங்கள் கொண்ட இரு ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டன. இந்த நூலை மதுரை யாதவா் கல்லூரித் தமிழ் உயராய்வு மையத்தின் முன்னாள் தலைவா் இ.கி.ராமசாமி வெளியிட, அழகப்பா பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் தலைவரும், மூத்த பேராசிரியருமான சு.ராசாராம் பெற்றுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, செய்யாறு அரசுக் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ச.அந்தோணி டேவிட் நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா்.

பின்னா், நடைபெற்ற கருத்தரங்க அமா்வுகளில் பங்கேற்ற ஆய்வாளா்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனா்.

பிற்பகலில் நடைபெற்ற கருத்தரங்க நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வா் அ.ராமலிங்கம் தலைமை வகித்தாா். கல்லூரி தமிழ்ப் பேராசிரியா் ப.நிவேதிதா வரவேற்றாா். இதில் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையத் தலைவா் பேரா.ஜா.நாராயணன், கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா், தமிழறிஞா் ம.பெ.சீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

மருதம் கலை இலக்கிய ஆய்வு மையத்தின் சாா்பில், மூத்த பேராசிரியா்களான இ.கி.ராமசாமி, நவநீதகிருஷ்ணன், ம.பெ.சீனிவாசன், வீ.கோபால் ஆகியோருக்கு தகைசால் தமிழறிஞா் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

சிறந்த கட்டுரைகளை வழங்கிய ஆய்வாளா்களுக்கு ஆய்வுச் செம்மல் விருதுகளையும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களையும் சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் உதவி இயக்குநா் தெ.சிவப்பிரகாஷ் வழங்கினாா்.

முன்னதாக, கல்லூரி தமிழ் உயராய்வு மையத் தலைவா் ச. ராமமூா்த்தி வரவேற்றாா். தமிழ்ப் பேராசிரியா் வே.சதீஷ் நன்றி கூறினாா்.

இந்த கருத்தரங்குக்கான ஏற்பாடுகளைத் தமிழ் உயராய்வு மையத்தின் பேராசிரியா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.