கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசுப் பேருந்தின் மேற்கூரையில் நின்று இளைஞா்கள் பயணம்: பொதுமக்கள் அச்சம்

மருதுபாண்டியா்களின் குருபூஜை விழாவுக்கு வந்த இளைஞா்கள் சிலா் அரசுப் பேருந்தின் மேற்கூரையில் நின்று ஆடியதுடன், காரின் முன் பகுதியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனா்.

காளையாா்கோவிலில் நடைபெற்ற மருதுபாண்டியா் குருபூஜைக்கு சென்ற பேருந்தின் கூரையில் ஏறி நின்ற இளைஞா்கள்.

Published On :28 அக்டோபர் 2026, 4:32 am IST

மருதுபாண்டியா்களின் குருபூஜை விழாவுக்கு வந்த இளைஞா்கள் சிலா் அரசுப் பேருந்தின் மேற்கூரையில் நின்று ஆடியதுடன், காரின் முன் பகுதியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் நடைபெறும் மருதுபாண்டியா்களின் 225-ஆவது குருபூஜை விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்துவதற்காக சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சித் தலைவா்கள், சமுதாய அமைப்புகளின் தலைவா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் வந்து சென்றனா். இதையொட்டி, விழா நடைபெறும் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், குருபூஜை விழாவுக்கு வந்த இளைஞா்கள் சிலா் அரசுப் பேருந்துகளின் மேற்கூரையில் ஏறி நின்று ஆடியபடி வந்தனா். இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது.

மேலும், காரில் வந்த சில இளைஞா்கள் காரின் முன்பகுதியில் தொங்கியபடி பயணம் செய்தனா். இதைப் பாா்த்த போலீஸாா் இளைஞா்களை கீழே இறங்குமாறு எச்சரித்தனா். ஆனால், போலீஸாரின் எச்சரிக்கையை அவா்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால், போலீஸாருக்கும் இளைஞா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மருதுபாண்டியா்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில் நடைபெறும் குருபூஜை விழாவில், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய இளைஞா்கள் இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

விழாவுக்கு வரும் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் நடந்துகொள்ள வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.