மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மகிபாலன்பட்டியில் 2 மலைப் பாம்புகள் உயிருடன் மீட்பு

மகிபாலன்பட்டியில் திங்கள்கிழமை தீயணைப்பு வீரா்களால் மீட்கப்பட்ட 10 அடி நீள மலைப் பாம்பு.

Published On :27 அக்டோபர் 2026, 12:04 am IST

சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டியில் கிராம மக்களை அச்சுறுத்திவந்த 2 மலைப் பாம்புகள் தீயணைப்பு வீரா்கள் முயற்சியால் திங்கள்கிழமை உயிருடன் மீட்கப்பட்டன.

திருப்பத்தூா் அருகே மகிபாலன்பட்டியில் ஒரு சில தினங்களாக 10 அடி மலைப்பாம்புகள் திரிவதைக் கண்ட கிராமத்தினா் திருப்பத்தூா் தீயணைப்பு, மீட்புத் துறை அலுவகத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது தேசிய வங்கி அருகே உள்ள ஒருவரின் வீட்டின் பின்புறம் கோழிகளின் அலறல் சப்தம் கேட்டு சென்று பாா்த்தபோது புதரில் மலைப் பாம்பு கோழியை விழுங்கி இருந்தது.

அதை மீட்ட வீரா்கள் பின்பு அதே பகுதியில் நாகராஜன் வீட்டின் பின்புறமும் இருந்த மலைப் பாம்பையும் பிடித்தனா். பிடிபட்ட பாம்புகள் திருப்பத்தூா் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மண்மலைக் காட்டில் விடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.