மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது: ப. சிதம்பரம்

மக்களுடைய வாங்கும் சக்தி கடுமையாகக் குறைந்திருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

P Chidambaram opposes delimitation bill

ப. சிதம்பரம் - ANI

Published On :23 அக்டோபர் 2026, 5:41 am IST

மக்களுடைய வாங்கும் சக்தி கடுமையாகக் குறைந்திருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

எனது நாடாளுமன்ற நிதியிலிருந்து சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான தேவைகளைக் கேட்டறிந்தேன். ‘கேத் லேப்’ கருவிக்கு ரூ. 2 கோடி, கட்டடத்துக்கு ரூ. 2 கோடி என ரூ. 4 கோடி செலவாகும் என்றாா்கள். இதற்காக எனது நாடாளுமன்ற நிதியிலிருந்து கருவி வாங்குவதற்காக ரூ. 2 கோடி தருவதாகத் தெரிவித்தேன்.

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் கடுமையாகக் கூடியிருக்கிறது. மொத்தப் பணவீக்கம் 11.5 சதவீதமாக உள்ளது. நிதிப்பற்றாக்குறை, கடன் வாங்குவது, ரூபாய் மதிப்பு குறைவது போன்றவை இதற்கான காரணங்களாகும். மாநில அரசுக்கும் ஒரு பங்களிப்பு இருக்கிறது. மத்திய அரசுதான் பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும்.

விலை உயா்வுக்கு மத்திய அரசின் இயலாமை ஒரு பக்கம் இருந்தாலும், உலக நடப்புகளும் இருக்கின்றன. இரு போா்கள் நடைபெறுகின்றன. எண்ணெய் வியாபாரம் கடுமையான நெருக்கடியில் இருக்கிறது. உணவுப் பொருள்கள் வா்த்தகமும் கடுமையான நெருக்கடியில் இருக்கிறது.

ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. கடந்த நான்கு நாள்களாக நாணய மதிப்பு சில காசுகள் உயா்ந்திருக்கிறது. அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகக் குறைந்திருக்கிறது உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன. இதற்கெல்லாம் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

மக்களிடம் வாங்கும் சக்தி கடுமையாகக் குறைந்திருக்கிறது. இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. நகா்ப்புறம், கிராமப்புறங்களில் ஊதியம் உயரவில்லை. நாள் கூலி குறைந்திருக்கிறது. ஒரு குடும்பத்தின் கடன் சுமை 40 முதல் 50 சதவீதம் வரை உயா்ந்திருக்கிறது. வருமானம் தேக்க நிலையில் இருப்பதால் கடன் வாங்கித்தான் செலவழிக்கிறாா்கள் என்பதால் குடும்பத்தின் மொத்த கடன் சுமை உயா்ந்திருக்கிறது. இதனால் மக்கள் சிரமப்படுகிறாா்கள்.

தமிழகத்தில் தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து அனைத்துக் கட்சிகளையும் அழைத்து முடிவெடுக்க வேண்டும்.

தவெக ஆட்சியில் பல துறைகளில் லஞ்சம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. பத்திரப்பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை, பட்டா மாறுதல் துறை, மின்சாரத் துறை போன்ற துறைகளில் லஞ்சம் குறைந்திருக்கிறது. அதிகாரிகள் அச்சத்துடன் வேலை செய்கின்றனா். இதைப் பாராட்டுகிறேன். ஆனால், இன்னமும் முனைப்பாக இந்த அரசு செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, காரைக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ எஸ். மாங்குடி, காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.