மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் மாநில ஆன்மிக மாநாடு தொடக்கம்

தமிழக மாநில தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் ஆன்மிக மாநாடு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.

Published On :24 அக்டோபர் 2026, 4:49 am IST

தமிழக மாநில தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் ஆன்மிக மாநாடு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.

ஸ்ரீசுவாமி சிவானந்தா் கடந்த 1887-ஆம் ஆண்டு தென்தமிழகத்தின் பத்தமடையில் தோன்றினாா். பின்னா், மலேசியாவில் மருத்துவராக மக்கள் தொண்டாற்றினாா். அனைத்தையும் துறந்து துறவியாக கடந்த 1924-ஆம் ஆண்டு ரிஷிகேஷ் வந்தடைந்தாா். அங்கு பல வருடங்கள் தவம்புரிந்தாா். ஜீவன் முக்தராக விளங்கி, அங்கு சிவானந்த ஆசிரமத்தை நிறுவினாா். மக்களுக்கு மருத்துவச் சேவை செய்து, 300-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி மக்களுக்காக அன்பைப் போதித்தாா்.

தற்போது உலகமெங்கும் சிவானந்தா ஆசிரமக் கிளைகள் மூலம் இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவருக்கு சீடா்கள் உள்ளனா். எளியவருக்கும் அன்பு செய்து அவா்கள் மூலம் இறைவனை காண்பது இவரது தவ வாழ்க்கையாகும் .

காரைக்குடியில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து இவரது சீடா்கள் கலந்து கொண்டனா். மாநாட்டில் முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள இசையுடன் சிவானந்தா ஆசிரம பிராா்த்தனையுடன் தொடங்கியது.

சங்கத்தின் ரிஷிகேஷ் துணைத் தலைவா்கள் பூஜ்ய ஸ்ரீ சுவாமி பத்மநாபனந்தா மகாராஜ், பரம பூஜ்ய ஸ்ரீ சுவாமி நிா்லிப்தானந்த மகாராஜ் ஆகியோா் மாநாட்டை தொடங்கிவைத்து ஆசியுரை வழங்கினா். திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞானபரமாசாரியா் சுவாமிகள் அருளுரை வழங்கினாா். ‘தமிழகத்தின் தவப்புதல்வா் சுவாமி சிவானந்தா’ என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவாளா் ரெ. ராஜ்குமாா் சிறப்புரை ஆற்றினாா்.

முன்னதாக, மதுரை தெய்வநெறிக்கழகத் தலைவா் சுவாமி சிவானந்தா சுந்தரானந்த மகராஜ் வரவேற்றாா். காரைக்குடி தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் செயலா் பொறியாளா் முத்து. அருணாசலம் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.