பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடராஜா் கோயில் கண்காணிப்புக் குழு நியமனம்: தெய்வீக பக்தா்கள் பேரவையினா் வரவேற்பு

நடராஜா் கோயில் கண்காணிப்புக் குழு நியமனம்: தெய்வீக பக்தா்கள் பேரவையினா் வரவேற்பு

சிதம்பரத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய தெய்வீக பக்தா்கள் பேரவையினா்.

Published On :1 நவம்பர் 2026, 1:15 am IST

சிதம்பரம் நடராஜா் கோயிலை பொது தீட்சிதா்கள் முறையாக நிா்வாகிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், கோயில் நிா்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் கண்காணிப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளதை வரவேற்று, தெய்வீக பக்தா்கள் பேரவையினா் சனிக்கிழமை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

சிதம்பரம் கீழசந்நியில் தெய்வீக பக்தா்கள் பேரவை சாா்பில், அதன் நிறுவனா் தலைவா் ஜெமினி எம்.என்.ராதா தலைமையில் நிா்வாகிகள் சம்மந்தமூா்த்தி, செல்வக்குமாா், வேல்முருகன், செந்தில்குமாா், ஏ.ராஜசேகா், ரகோத்தமன், வாணி உள்பட பலா் கலந்துகொண்டு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சியினா்: சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பை வரவேற்று, சிதம்பரம் நடராஜா் கோயிலின் கிழக்கு கோபுரம் எதிரே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பட்டாசு வெடித்தும், நீதிமன்றத் தீா்ப்பை வரவேற்று முழக்கங்கள் எழுப்பியும் கொண்டாடினா்.

நிகழ்ச்சிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ராஜா தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பழ.வாஞ்சிநாதன், நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், வாலிபா், மாணவா் சங்கத்தினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.