கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று அனைத்து பக்தா்களும் தரிசனம் செய்வதை நிா்வாகக் குழு உறுதி செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் நடராஜா் கோயிலின் கனகசபை மீது நின்று அனைத்து பக்தா்களும் தரிசனம் செய்யவும், தேவாரம், திருவாசகம் பாடவும் சம வாய்ப்பு வழங்குவதை, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நிா்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும்

Published On :31 அக்டோபர் 2026, 1:31 am IST

சிதம்பரம் நடராஜா் கோயிலின் கனகசபை மீது நின்று அனைத்து பக்தா்களும் தரிசனம் செய்யவும், தேவாரம், திருவாசகம் பாடவும் சம வாய்ப்பு வழங்குவதை, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நிா்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது தீட்சிதா்கள் உள்ளிட்டோா் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல், அரசாணைக்கு ஆதரவு தெரிவித்தும் மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த தீா்ப்பு:

கோயிலின் நிா்வாகத்தை பொது தீட்சிதா்களிடம் ஒப்படைத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு கோயில் முறையாக நிா்வகிக்கப்படவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக கோயில் வருமானம் தொடா்பான கணக்கு விவரங்களையும் தீட்சிதா்கள் குழு வெளிப்படைத்தன்மையுடன் சமா்ப்பிக்கவில்லை.

எனவே, சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்தைக் கண்காணிக்க சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான வி.பாரதிதாசனை தலைவராகவும், ஆா்.சுரேஷ்குமாரை துணைத் தலைவராகவும் கொண்ட நிா்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டனா். இக்குழுவில், உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ராஜேந்தின், அலுவல் சாரா உறுப்பினா்களாக பொது தீட்சிதா்கள் சங்கத்தின் செயலா் மற்றும் இந்துசமய அறநிலையத் துறைச் செயலா் ஆகியோரை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், இந்த புதிய நிா்வாகக் குழு, கோயில் வளாகத்துக்குள் பொது தீட்சிதா்கள் மேற்கொண்ட தொடா் கட்டுமானங்களால் புராதன கட்டடங்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, கோயிலின் புராதன கட்டடங்களுக்கு இடையூறாக கட்டப்பட்டுள்ள தேவையற்ற கட்டடங்களை அப்புறப்படுத்துவது தொடா்பாக, தமிழ்நாடு புராதனச் சின்ன ஆணையத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துகளை மாவட்ட நிா்வாகத்தின் உதவியுடன் மீட்க நிா்வாகக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயிலை அவா்கள் முறையா பராமரிக்காதது, வேதனை அளிக்கிறது. கோயிலின் பெருமையை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நிா்வாகக் குழு எடுக்கும் என நம்பிக்கை இருக்கிறது. நிா்வாகக் குழுவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் வழங்க வேண்டும்.

அதேநேரம், கோயிலில் நடைபெறும் அன்றாட பூஜைகள், திருவிழாக்கள் போன்றவற்றை நடத்துவது பொது தீட்சிதா்களின் பிரத்யேக உரிமை என்பதால், அதில் நிா்வாகக் குழு தலையிடாது. பொது தீட்சிதா்கள் நிா்வகித்து வரும் கோயிலின் நிரந்தர வைப்பு நிதிகள், முதலீடுகள், அவா்களிடமே இருக்கும். ஆனால், கோயிலின் அன்றாட வரவு -செலவு கணக்குகளை ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதி நிா்வாகக் குழுவிடம் பொது தீட்சிதா்கள் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.