கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முறையூா்மீனாட்சி சொக்கநாதா் கோயில் அம்புவிடும் விழா

சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை முறையூா் மீனாட்சி சொக்கநாதா் கோயிலில் பத்தாம் நாள் விஜயதசமியை முன்னிட்டு சூரனை வதம் செய்யும் விதமாக அம்பு விடும் விழா நடைபெற்றது.

சிங்கம்புணரி அருகே முறையூா் மீனாட்சி சொக்கநாதா் கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்பு எய்தும் விழா.

Published On :21 அக்டோபர் 2026, 3:04 am IST

சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை முறையூா் மீனாட்சி சொக்கநாதா் கோயிலில் பத்தாம் நாள் விஜயதசமியை முன்னிட்டு சூரனை வதம் செய்யும் விதமாக அம்பு விடும் விழா நடைபெற்றது.

இதில் குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலின் கிழக்கு புறமான மகா்நோம்பு பொட்டல் பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்து நான்கு திசைகள் நோக்கி அம்புகளை சிவாச்சாரியாா் எய்தினாா். அம்புகளை சேகரிப்பது விசேஷம் என்பதால் அம்புகளைச் சேகரிக்க இளைஞா்கள், பொதுமக்கள் போட்டிபோட்டு சேகரித்தனா். தொடா்ந்து கோயிலில் மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் முறையூா் மற்றும் சுற்று கிராமங்களை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.