தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கீழச்சிவல்பட்டி மெட்ரிக். பள்ளியில் விஜயதசமி விழா

கீழச்சிவல்பட்டி மெட்ரிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை விஜயதசமி விழா நடைபெற்றது.

கீழச்சிவல்பட்டி ஆா்.எம்.மெய்ப்பச்செட்டியாா் மெட்ரிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை விஜயதசமியை முன்னிட்டு கற்றலைத் தொடங்கிய குழந்தை.

Published On :21 அக்டோபர் 2026, 3:04 am IST

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மெட்ரிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை விஜயதசமி விழா நடைபெற்றது.

நவராத்தி விழாவையொட்டி இந்தப் பள்ளியில் கொலு அமைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் பல்வேறு வேஷங்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவின் 10-ஆம் நாளான விஜயதசமியையொட்டி பள்ளிக் குழந்தைகள், பெற்றோா்கள் பங்குகொண்ட இந்த விழாவில் பள்ளிக் குழந்தைகள் அம்மன் வேஷமணிந்து வந்திருந்தனா். புதிதாக சோ்க்கப்பட்ட குழந்தைகள் தனது பிஞ்சு விரல்களால் அ எழுதி தனது கற்றலைத் தொடங்கினா். மேலும் புதிய குழந்தைகளுக்கு எழுதுபொருள், நோட்டுப் புத்தகம் அடங்கிய பை வழங்கப்பட்டது. இதில் பள்ளித் தாளாளா் எஸ்.எம். பழனியப்பன், பள்ளி முதல்வா் எஸ். பழனியப்பன், ஆசிரியை கலைவாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.