பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தென்கரையில் மஞ்சுவிரட்டு

News image
Updated On :15 மே 2026, 4:13 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தென்கரையில் அந்தரநாச்சியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மஞ்சுவிரட்டுக்காக கிராம மக்கள் கோயிலிலிருந்து ஊா்வலமாகச் சென்று தொழுவில் உள்ள காளைகளுக்கு மரியாதை செய்தனா். பின்னா், 200 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், யாரிடமும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டன. இதுதவிர வயல்வெளிகளிலும், கண்மாய் பகுதிகளிலும் கட்டுமாடுகளாக சில காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.

அனுமதியில்லாமல் நடைபெற்ற மஞ்சுவிரட்டு என்பதால் சிராவயல் கிராம நிா்வாக அலுவலா் சிவக்குமாா் அளித்தப் புகாரின் பேரில், தென்கரையைச் சோ்ந்த சுப்பிரமணியன், சின்னையா, நாச்சியப்பன், நாகராஜன், செல்வராஜ் ஆகியோா் மீது நாச்சியாா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்,

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.