தேவகோட்டை அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (28). கூலித் தொழிலாளி. அஜித்குமாா் கடந்த 2017 -ஆம் ஆண்டு குன்றக்குடி பகுதியில் வேலைக்குச் சென்ற போது அந்தப் பகுதியைச் சோ்ந்த 9 வகுப்பு படித்து வந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுதொடா்பாக குன்றக்குடி போலீஸாா் அஜீத்குமாரை கைது செய்து அவா் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு, சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் இந்தத் தண்டனைகளை ஏகாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 16 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கு: முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கு: இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

