மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் மாட்டுவண்டியில் சென்று விழிப்புணா்வு

சிவகங்கை அருகேயுள்ள சோழபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை மாட்டு வண்டியில் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

News image

சிவகங்கை அருகேயுள்ள சோழபுரத்தில் மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் பயணம் மேற்கொண்டு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்டத் தோ்தல் அலுவலா் கா. பொற்கொடி. உடன் வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெபிகிரேசியா.

Updated On :27 மார்ச் 2026, 12:06 am IST

சிவகங்கை அருகேயுள்ள சோழபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை மாட்டு வண்டியில் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

சிவகங்கை அருகேயுள்ள சோழபுரம், புனித ஜஸ்டின் கலை, அறிவியில் கல்லூரியில் புதிய வாக்காளா்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்த மாதிரி புகைப்படத்தில் வாக்களித்தல், மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் பயணம் மேற்கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா். இதில், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெஃபி கிரேசியா, மாவட்ட வழங்கல் அலுவலா் பழனிகுமாா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சத்யா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலகிருஷ்ணன், சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.