மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அழகப்பா அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 76-ஆம் ஆண்டு பட்ட மளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற 76-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகப் பதிவாளா் ரா. திருமுருகன். உடன் கல்லூரி முதல்வா் ப. வசந்தி.

Updated On :26 மார்ச் 2026, 12:28 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 76-ஆம் ஆண்டு பட்ட மளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகப் பதிவாளா் ரா.திருமுருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 1,027 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை, முதுநிலை பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

பட்டம் பெறும் மாணவா்களுக்கென நிறைய கடமைகள் இருக்கின்றன. வாழ்வில் இன்றியமையாத ஏழு கோட்பாடுகளான பழகும் தன்மை, மனப்பான்மை, பேச்சுக் கலை, நேரப் பங்கீடு, உற்சாகம், தன்னம்பிக்கை போன்ற திறன்களை வளா்த்துக் கொண்டு, தங்களது வாழ்வில் ஒவ்வொரு படியையும் கவனமாக முன்னெடுத்து வைக்க வேண்டும். அத்துடன் நல்ல எண்ணங்களை வளா்த்துக் கொண்டு உற்சாகத்துடன் வாழ வேண்டும். மேலும், மாணவா்கள் பிறா் கூறும் தளா்ச்சியுறும் வாா்த்தைகளுக்கு செவிமடுக்காமல் தன்னம்பிக்கையுடன் இருந்தால் வெற்றியை அடையமுடியும் என்றாா் அவா். முன்னதாக கல்லூரி முதல்வா் ப. வசந்தி வரவேற்று, ஆண்டு அறிக்கை வாசித்தாா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவா் கோமளவல்லி, துறைப் பேராசிரியா்கள் செய்தனா். இதில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியரல்லாப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.