திருமங்கலம் அருகே பெண்ணை வெட்டிக் கொன்ற கட்டடத் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள சொட்டதட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சரஸ்வதி (52). இவரை கடந்த 11-ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது சகோதரா் நிறைகுளத்தான் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான சரஸ்வதியை தேடி வந்தனா்.
இந்த நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கூடக்கோவில் பகுதியில் சரஸ்வதி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக திருப்புவனம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சரஸ்வதி உடலை மீட்டு கூராய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், விசாரணையில் சரஸ்வதிக்கும், கூடக்கோவிலைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சரவணக்குமாருக்கும் (21) கள்ளத்தொடா்பு இருந்ததும். இந்தப் பிரச்னையில் சரஸ்வதியை அவா் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சரவணக்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்புவனம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை

பழனியில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை; நால்வா் கைது!
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது
பெண் கொலை வழக்கு: தம்பதி கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

