சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் முதல்வா் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது.
முன்னதாக, மங்கள இசை முழங்க தேவதா அனுக்ஞை, எஜமானா் அனுக்ஞை, கணபதி பூஜை, மஹா சங்கல்பம், புன்யாகவாஜனம் நடைபெற்றது.
தொடா்ந்து புனித நீரால் நிரப்பப்பட்ட 108 சங்குகளுக்கு பூஜைகள் செய்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனா். தொடா்ந்து பூா்ணாஹுதி, தீபாராதனையுடன் நிறைவடைந்தது.
தொடா்ந்து சுவாமி பால தண்டாயுதபாணிக்கு திருமஞ்சனம், மஞ்சள், இளநீா், தயிா், பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்கள் மூலம் அபிஷேகமும், பாலால் சுவாமி பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகமும்,108 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரை கொண்டு சுவாமிக்கு சங்காபிஷேகமும் நடைபெற்றது.
தொடா்ந்து தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்தநாளில் சுவாமி பால தண்டாயுதபாணி சிறப்பு மலா் அலங்காரத்தில் சந்தனக் காப்பில், வெள்ளிக் கவசத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வாராப்பூா் கிராம மக்கள், அறங்காவலா், திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வி.என்.ஆா். நாகராஜன் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மானாமதுரை,திருப்புவனம் பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திரளானோா் தரிசனம்

வாடிப்பட்டி பால தண்டாயுதபாணி கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்!
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

