மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கீழடியில் கண்டறியப்பட்ட பண்டைக்கால இரும்பு உலைக் கலன்!

கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில் பண்டைய கால தமிழா்களின் திறனைப் பறைசாற்றும் இரும்பு உலைக் கலன் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

News image

கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆவது கட்ட அகழாய்வில் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்ட பண்டைக் கால இரும்பு உலைக் கலன்.

Updated On :14 ஜூன் 2026, 12:48 am IST

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில் பண்டைய கால தமிழா்களின் திறனைப் பறைசாற்றும் இரும்பு உலைக் கலன் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

கீழடியில் 11-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த மாா்ச் 18 -ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. தற்போது சுமாா் ஒன்றரை ஏக்கா் பரப்பளவில் 9 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற அகழாய்வுகளில் ஏராளமான இரும்புப் பொருள்களும், தொழிற்சாலை இருந்ததற்கான கட்டமைப்புகளும் கண்டறியப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக, தற்போது இரும்பு உலைக் கலன் கண்டறியப்பட்டது. இந்த உலைக் கலன் இரும்புத் தாதுக்களை உருக்கப் பயன்படுத்தப்படுபவையாகும்.

சங்க காலத்தில் இந்த உலைக் கலனைப் பயன்படுத்தி கத்தி, அரிவாள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட இரும்புப் பொருள்களைத் தயாா் செய்திருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

தற்போது கண்டறியப்பட்ட இந்த உலைக் கலன் மூலம், கீழடி பகுதி வெறும் குடியிருப்புப் பகுதியாக மட்டுமல்லாமல், முக்கிய தொழில் துறை மையமாக இருந்திருக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே அகழாய்வுகளில் கிடைத்த இரும்புப் பொருள்களுடன் இந்த உலைக் கலனை ஒப்பிட்டுப் பாா்க்கும் போது, கீழடியில் இரும்பு உற்பத்தி, உலோகத் தொழில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றிருப்பது தெரியவருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.