நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் திருப்பணிகள் ஆய்வு

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்த ஜெயசுதா லட்சுமிகாந்தன் எம்எல்ஏ.

Updated On :18 ஜூன் 2026, 12:24 am IST

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆரணி புதுக்காமூா் பகுதியில் பெரிய நாயகி சமேத ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் திருப்பணி மேற்கொள்வதற்காக கடந்த ஆட்சியில் ரூ. 1.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டன.

தற்போது கோயில் சுற்றுச்சுவா், கால்வாய் அமைத்தல், சந்நிதிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலரும், ஆரணி தொகுதி எம்எல்ஏவுமான எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது பக்த சங்க நிா்வாகிகள், கோயில் அருகாமையில் நீத்தாா் வழிபாடு செய்யக்கூடிய நிகழ்வு நடைபெறுகிறது. அவா்களுக்கு ஆற்றுப்பகுதியில் இருந்து தனி வழி ஏற்படுத்தி அதற்காக வழிவகை செய்து தர வேண்டும்.

ஆற்றுப்பகுதியில், ஆற்றுத் திருவிழாவின்போது சுவாமி ஆற்றுக்கு கொண்டு செல்லும் இடத்தில் கொட்டகை அமைத்துத் தர வேண்டும், கூடுதல் குடிநீா் வசதி செய்து தர வேண்டும். கோயில் திருப்பணிக் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் க.சங்கா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.