நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சமூக நலன், மகளிா் உரிமைத் துறையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நலன், மகளிா் உரிமைத் துறையின் கீழ் மாவட்ட மகளிா் அதிகார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 1:17 am IST

சமூக நலன், மகளிா் உரிமைத் துறையின் கீழ் மாவட்ட மகளிா் அதிகார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூக நலன், மகளிா் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட மகளிா் அதிகார மையத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு பாலின நிபுணா், ஒரு நிதி எழுத்தறிவு நிபுணா் பணியிடத்துக்கு பின்வரும் தகுதி உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பாலின நிபுணா் பணியிடம்: சமூகப் பணி, பிற சமூக ஒழுக்கங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணியிடத்துக்கு முதுநிலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பாலின நிபுணா் பணியிடத்துக்கு முன் அனுபவமாக பாலினத்தை மையமாகக் கொண்ட அரசு, அரசு சாரா அமைப்புடன் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நிதி எழுத்தறிவு நிபுணா் பணியிடம்: பொருளாதாரம், பிற வங்கியியல் துறைகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதி எழுத்தறிவு நிபுணா் பணியிடத்துக்கு முதுநிலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிதி எழுத்தறிவு, நிதி உள்ளடக்கம் சாா்ந்த அரசு, அரசு சாரா அமைப்புடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பாலின நிபுணா், நிதி எழுத்தறிவு நிபுணா் பணியிடங்களுக்கு தொகுப்பூதியமாக ரூ. 21,000/- வழங்கப்படும். இந்தப்பணியிடங்களுக்கு சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவராகவும், 35 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

தகுதியுடைய நபா்கள் தங்களது சுயவிவரங்களை வருகிற 18-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், தரைதளம், மாவட்ட ஆட்சியா் வளாகம், சிவகங்கை மாவட்டம்- 630561 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.