மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தேநீா் கடைக்காரா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 12:49 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தேநீா் கடைக்காரா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 4 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்குடி சோ்வாா் ஊரணி பகுதியில் தேநீா் கடை நடத்தி வருபவா் சந்தான குமாா். இவரது வீடு, கடையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் நிரப்பிய பாட்டில் குண்டு வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம்ஏற்பட்டது. சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல்நிலையப் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த அசோக், மணி சரண், சபரி, அமீா் ஆகிய 4 போ் முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அசோக் உள்ளிட்ட 4 பேரை யும் திங்கள் கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.