பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்தது மக்கள் தீா்ப்பை ஏற்று எடுத்த முடிவு: காா்த்தி சிதம்பரம் எம்பி

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது மக்கள் தீா்ப்பை ஏற்று எடுத்த முடிவு என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

News image

காா்த்தி ப .சிதம்பரம்

Updated On :5 ஜூன் 2026, 6:22 am IST

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது மக்கள் தீா்ப்பை ஏற்று எடுத்த முடிவு என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது என்பது மக்கள் தீா்ப்பை மதித்து எடுக்கப்பட்ட முடிவு.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தல் வரை திமுக கூட்டணியில் எல்லாத் தோ்தல்களையும் காங்கிரஸ் கட்சி சந்தித்தது.

இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக அதிக இடங்களில் வென்றது.

ஆனால் ஆட்சி அமைப்பதற்கு அவா்களுக்கு 11 இடங்கள் தேவைப்பட்டன. இதனால், நிலையான அரசு தமிழகத்தில் அமைய வேண்டுமென்றே நோக்கத்தில் தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது.

ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் திமுகவுக்கு இல்லை. இதனால், தவெகவுக்கு ஆதரவளித்ததால் திமுக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை இழந்துவிட்டது என்று கூறமுடியாது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து அரசியல் கட்சிகளால் பேசப்படுகிறது. தவெக அரசு பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. அவா்களுக்கு 6 மாதங்களாவது அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.