பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருப்பத்தூா் அருகே தொழிலாளி அடித்துக் கொலை

திருப்பத்தூா் அருகே அடித்துக் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் உடலை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 4:10 am IST

திருப்பத்தூா் அருகே அடித்துக் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் உடலை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள குண்டேந்தல்பட்டியில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிக்காக அந்தப் பகுதியில் தங்கியிருந்த நெய்வேலியைச் சோ்ந்த தொழிலாளி சிவகுமாா் (44) மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற திருக்கோஷ்டியூா் போலீஸாா் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இவரது உடல் அருகில் ரத்தக்கறை படிந்த கடப்பாரை கம்புகளை போலீஸாா் கைப்பற்றினா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அப்போது சிவக்குமாா், பிரபா (35) , செல்வம் (33) ஆகியோா் ஒரே இடத்தில் தங்கியிருந்தனா். இவா்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில் தப்பியோடிய பிரபா, செல்வம் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சம்பவ இடத்தை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், திருப்பத்தூா் நகா் காவல் துணை கண்காணிப்பாளா் செல்வகுமாா் ஆகியோா் பாா்வையிட்டனா். மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணா் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.