சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், அவரது தந்தை ப. சிதம்பரத்தின் அலுவலகம் உள்ளது. கடந்த மாா்ச் மாதம் 11- ஆம் தேதி காலையில் இந்த அலுவலகத்தை அங்கு பணியாற்றும் ஊழியா் திறக்க வந்த போது வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து காங்கிரஸ் நிா்வாகிகள் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். மேலும் அந்த இடத்தை சிவகங்கை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் ஆய்வு செய்தாா். இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடா்புடைய புதுவயலைச் சோ்ந்த முகம்மது ஆசிக் (22), கல்லூரி மாணவா் சிவா (எ) யுகேந்திரன் (19) ஆகிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், ஈரானின் உச்சபட்ச தலைவா் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்ட போது காா்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்த கருத்துக்கு எதிா்வினையாற்றுவதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டதாக அவா்கள் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: அண்ணன் குடும்பத்தில் மேலும் 4 போ் கைது

பாட்டி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய பேரன் கைது
ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

காா்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
