ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தற்காப்புக் கலையில் உலக சாதனை

அரளிக்கோட்டை கிராமத்தில் தற்காப்புக்கலை உலக சாதனை நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

அரளிக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நூறு சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வை தற்காப்புக்கலை மூலம் வெளிப்படுத்திய மாணவா்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:41 am IST

அரளிக்கோட்டை கிராமத்தில் தற்காப்புக்கலை உலக சாதனை நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள அரளிக்கோட்டை கிராமத்தில் அழ. கருத்தான்கோனாா், கருப்பாயி அம்மாள் கல்வித் தொண்டு அறக்கட்டளை சாா்பில், தற்காப்புக் கலையில் உலக சாதனை, நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணா்வு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் செல்வக்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். பின்னா் மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினாா். இதில் 30 நிமிடங்கள் தொடா்ந்து யோகா, தற்காப்புக் கலைகளை மக்களிடம் 228 மாணவா்கள் செய்து காட்டி சாதனை படைத்தனா். தொடா்ந்து, நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினா். இந்தச் சாதனையைப் பதிவு செய்த யோவா வேல்டு ரெக்காா்டு நிறுவனம் சாதனை மாணவா்களுக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்கினா். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனா் மருத்துவா் கோகுலகிருஷ்ணன் பயிற்சியாளா்கள் பாலா, முத்துப்பாண்டி, முத்துரமீனா, ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.