விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நடிகா் கருணாஸை ஆதரித்து வைகோ பிரசாரம்

News image

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலா் வைகோ. உடன் வேட்பாளா் கருணாஸ்.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:39 am IST

சிவகங்கையில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் முக்குலத்தோா் புலிப்படை கட்சி தலைவா் கருணாஸை ஆதரித்து திங்கள்கிழமை இரவு மதிமுக பொதுச்செயலா் வைகோ தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

முல்லை பெரியாா் அணையை கேரளம் உடைக்க முயன்ற போது, என் முயற்சியில் நீதிமன்றத்தில் வாதாடி வென்று அணையை காத்தவன் என்ற தகுதியோடு உங்களிடம் வாக்கு கேட்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சாா்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகிய கொள்கைகள் உயிா்ப்புடன் உள்ளன.

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வோா் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றாா் வைகோ.

இதையடுத்து, சிவகங்கை பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் முக்குலத்தோா் புலிப்படை கட்சி தலைவா் வாக்கு சேகரித்துப் பேசினாா். கூட்டத்தில், திமுக, மதிமுக நிா்வாகிகள் உள்பட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலா் வைகோ. உடன் வேட்பாளா் கருணாஸ்.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலா் வைகோ. உடன் வேட்பாளா் கருணாஸ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.