மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காரைக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

காரைக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற நேஷனல் கல்வி நிறுவனங்களின் மாணவா்கள்.

News image

காரைக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற நேஷனல் கல்வி நிறுவனங்களின் மாணவா்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 1:18 am IST

காரைக்குடி, ஏப். 8: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு நேஷனல் கல்லூரிகளின் தாளாளரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைத் தலைவருமான எஸ். சையது தலைமை வகித்தாா். காரைக்குடி வட்டாட்சியா் ராஜா கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் சுந்தரராமன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் பிரபு, காரைக்குடி தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரகாஷ், இளம்செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பரிதாபேகம், தோ்தல் ஒருங்கிணைப்பாளா் ஆதீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் நிறைவு பெற்றது. கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் பேரணியில் கலந்துகொண்டு 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மேலும், பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.