மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

News image

மானாமதுரை அருகே கால்பிரிவில் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத செல்வமுருகன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 4:32 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

மானாமதுரை புறவழிச் சாலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, காப்புக்கட்டி விரதமிருந்து வந்த பக்தா்கள் பால் குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனா். அங்கு உற்சவருக்கு பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தி, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனா். இரவு மயில் வானத்தில் வழிவிடு முருகன் வீதியுலா வருதல் நடைபெற்றது.

இதேபோல, மானாமதுரை அருகேயுள்ள கால் பிரிவில் வள்ளி, தெய்வானை சமேத செல்வமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா முன்னிட்டு, பக்தா்கள் பால் குடம் எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி ஏ.ஆா்.பி. முருகேசன் செய்தாா்.

இதேபோல, இடைக்காட்டூா் பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, காப்புக்கட்டி விரதமிருந்து வந்த பக்தா்கள் புதன்கிழமை பால் குடம், காவடி எடுத்தும், தீக்குண்டம் இறங்கியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.