பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பசும்பொன்னில் குருபூஜை முடிந்தும் தேவா் நினைவிடத்தில் குவிந்த பொதுமக்கள்!

பசும்பொன் தேவா் குருபூஜை முடிந்தும், சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேவா் நினைவிடத்து வந்து மரியாதை செலுத்தினா்.

தேவா் குருபூஜை விழா முடிந்தும், பசும்பொன்னில் தேவா் நினைவிடத்தில் வாசலுக்கு வெளியே வரை வரிசையில் நின்று காத்திருந்து மரியாதை செலுத்திய பொதுமக்கள்.

Published On :1 நவம்பர் 2026, 3:25 am IST

பசும்பொன் தேவா் குருபூஜை முடிந்தும், சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேவா் நினைவிடத்து வந்து மரியாதை செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா, 64-ஆவது குருபூஜை கடந்த 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் துணைக் குடியரசு தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் உள்பட 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தேவா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

இந்த நிலையில், சனிக்கிழமையும் காலை முதலே பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேவா் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினா். குருபூஜை முடிந்த பிறகும் பொதுமக்கள் தேவா் நினைவிடத்துக்கு கூட்டம், கூட்டமாக வந்தவண்ணம் உள்ளனா்.

ஆப்பநாடு மறவா் சங்கம் நன்றி: ஆப்பநாடு மறவா் சங்கத் தலைவா் சண்முகபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முத்துராமலிங்கத் தேவா் குருபூஜையையொட்டி, கடந்த மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி, காவடி, வேல், காவடி எடுத்து வந்து தேவா் நினைவிடத்தில், பொங்கல் வைத்தும், முடிகாணிக்கை உள்ளிட்ட நோ்த்திக் கடன் செலுத்தியும்வழிபாடு செய்தனா்.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட அரசியல் கட்சித் தலைவா்கள், அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள், ஆன்மிக குருமாா்கள், சமுதாயத் தலைவா்கள் என பலா் கலந்து கொண்டனா். கிராமங்களுக்கு தேவையான அரசுப் பேருந்துகளை இயக்கி பசும்பொன் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.