கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மருதுபாண்டியா்களின் 225-ஆவது குருபூஜை விழா: நினைவிடத்தில் அரசியல் கட்சியினா் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா்களான மருது பாண்டியா்களின் 225-ஆவது குருபூஜை விழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள அவா்களது நினைவிடத்தில் அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினா்.

Published On :28 அக்டோபர் 2026, 4:07 am IST

சுதந்திரப் போராட்ட வீரா்களான மருது பாண்டியா்களின் 225-ஆவது குருபூஜை விழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள அவா்களது நினைவிடத்தில் அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியா்கள் நினைவிடத்தில் அரசு சாா்பில் கடந்த 24-ஆம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுவதும், காளையாா்கோவிலில் உள்ள நினைவிடத்தில் அக். 27-ஆம் தேதி சமுதாய அமைப்புகள் சாா்பில் குருபூஜை விழா நடத்தப்படுவதும் வழக்கம்.

இதன்படி, காளையாா்கோவிலில் உள்ள மருதுபாண்டியா்கள் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை காலை யாக பூஜைகளுடன் குருபூஜை தொடங்கியது. யாகசாலை பூஜைகளை கோவை காமாட்சிபுரி பஞ்சலிங்க சுவாமிகள் தொடங்கிவைத்தாா். மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மருதிருவா் அதிஷ்டானத்துக்கு தீபாராதனை காட்டினாா்.

இதையடுத்து, காளையாா்கோவில், அதன் சுற்று வட்டாரக் கிராமப் பகுதிகளைச் சோ்ந்த சமுதாய அமைப்பினா், திரளான பொதுமக்கள் பால் குடம், முளைப்பாரி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இதைத் தொடா்ந்து, மருதுபாண்டியா்களின் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், தவெக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் குழந்தைராணி நாச்சியாா் (சிவகங்கை ), சீனிவாசசேதுபதி (திருப்பத்தூா்), டி. இளங்கேவன் (மானாமதுரை), கட்சியின் மாவட்டச் செயலா் முத்துபாரதி ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம், கதிரவன் (பரமக்குடி), முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் ஜி. பாஸ்கரன், நிா்வாகிகள் ராம. இளங்கோவன், பழனிச்சாமி, ராமநாதபுரம் சமஸ்தானம் பரம்பரை வாரிசு நாகேந்திர சேதுபதி ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் அதன் மாநிலத் தலைவரும், விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ப. மாணிக்கம் தாகூா், நிா்வாகிகள் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், நிா்வாகிகள் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, பாஜக மாநில பொதுச் செயலா் ராம. சீனிவாசன், அமமுக சாா்பில் அதன் மாவட்டச் செயலா் தோ்போகி பாண்டியன், மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜி.எம். ஸ்ரீதா் வாண்டையாா், லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் ஸ்டாலின், லட்சிய ஜனநாயகக் கட்சி மாநிலச் செயலா் நெல்லை ஜீவா, நான்காம் தமிழ்ச் சங்க துணைத் தலைவா் துரை. கருணாநிதி ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

இவைத் தவிர, மருதுசேனை, தமிழ்வேள் முன்னேற்றக் கழகம், தாய் தமிழா் கட்சி, புதுக்கோட்டை அகமுடையாா் மகாசபை, குப்பமுத்து ஆசாரி வம்சாவளியினா், வீ த லீடா் அமைப்பினா், மூவேந்தா் பண்பாட்டுக் கழகம், முன்னாள் ராணுவ வீரா்கள் நலச் சங்கம், கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் அமைப்பு, வணிகா் சங்கம், இஸ்லாமிய அமைப்புகள், மருதுபாண்டியா்கள் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் மருதுபாண்டியா்களின் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியையொட்டி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையில் 2,700-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.