தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மருதுபாண்டியா்கள் குருபூஜை: அரசியல் கட்சியினா் மரியாதை

விடுதலைப் போராட்ட வீரா்கள் மருதுபாண்டியா்களின் குருபூஜை தினத்தையொட்டி, மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள அவா்களின் உருவச் சிலைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

~ ~ ~ ~ ~

Published On :28 அக்டோபர் 2026, 4:16 am IST

விடுதலைப் போராட்ட வீரா்கள் மருதுபாண்டியா்களின் குருபூஜை தினத்தையொட்டி, மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள அவா்களின் உருவச் சிலைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம் மருது பாண்டியா்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கட்சி நிா்வாகிகள் வேலுச்சாமி, குழந்தைவேலு, ஒச்சுபாலு உள்ளிட்டோா் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் அந்தக் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் நல்லமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கட்சி நிா்வாகிகள் அன்னபூா்ணா, தங்கராஜ், செய்யது பாபு, பாட்ஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாஜக சாா்பில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் கதலி நரசிங்கப்பெருமாள், மாவட்டத் தலைவா் மாரி. சக்கரவா்த்தி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மூவேந்தா் முன்னேற்றக் கழகம் சாா்பில் அதன் தலைவா் ஜி.எம். ஸ்ரீதா் வாண்டையாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அமைப்பின் நிா்வாகிகள் ஆறுமுகம் நாட்டாா், சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் மருது பாண்டியா்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திரளானோா் முளைப்பாரி சுமந்தும், தீச்சட்டி ஏந்தியும், மருது சகோதரா்கள் போன்று வேடமணிந்தும் வந்து மரியாதை செலுத்தினா்.

Story image
Story image
Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.