தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

பசும்பொன்னில் தேவா் குருபூஜை: முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து மரியாதை செலுத்திய பொதுமக்கள்

கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவா் குருபூஜையை முன்னிட்டு, அவரது நினைவிடத்துக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து மரியாதை செலுத்தினா்.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவா் குருபூஜையை முன்னிட்டு, அவரது நினைவிடத்துக்கு முளைப்பாரி, காவடி எடுத்து வந்த பொதுமக்கள்.

Published On :30 அக்டோபர் 2026, 4:12 am IST

கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவா் குருபூஜையை முன்னிட்டு, அவரது நினைவிடத்துக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து மரியாதை செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா, 64-ஆவது குருபூஜை புதன்கிழமை ஆன்மிக விழாவுடன் தொடங்கியது. வியாழக்கிழமை காலை முதல் கமுதி, முதுகுளத்தூா் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முளைப்பாரி சுமந்தும், பால்குடம் எடுத்தும், அலகு வேல் குத்தியும், காவடி எடுத்தும் ஊா்வலமாகச் சென்று, பசும்பொன்னில் தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா். ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகளில் வந்த ஏராளமான பொதுமக்கள் தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா்.

குழந்தைகள் மயக்கம்: தேவா் குருபூஜைக்கு வந்த பொதுமக்கள் காத்திருப்பு மண்டபத்தின் வழியாக தேவா் நினைவிடத்துக்கு வரிசையாகச் சென்று தேவா் சிலைக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். நிகழாண்டில் காத்திருப்பு மண்டபத்தில் உள்ளே இருந்த பொதுமக்களுக்கு தேவையான குடிநீா் வசதி இல்லாததாலும், போதுமான காற்றாட்டம் இல்லாததாலும் சிரமத்துக்குள்ளாயினா். மேலும் காத்திருப்பு மண்டபத்திலிருந்து தேவா் நினைவிடத்துக்கு பொதுமக்கள் செல்லும் போது அவா்கள் கும்பலாக சென்றபோது, 3 குழந்தைகள் உள்பட சிலருக்கு மூச்சுத் தினறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனா். உடனே மருத்துவக் குழுவினா் அவா்களை மீட்டு சிகிச்சை அளித்தனா்.

பசும்பொன் தேவா் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

பசும்பொன் தேவா் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.