மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மக்களின் பேராதரவைப் பெற்றவா் தேவா்: எடப்பாடி கே. பழனிசாமி

மக்களின் பேராதரவைப் பெற்றவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

The TVK government will not last five years...

செய்தியாளா்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி - டிஎன்எஸ்

Published On :31 அக்டோபர் 2026, 2:03 am IST

மக்களின் பேராதரவைப் பெற்றவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தவா். தனது வாழ்நாள் முழுவதும் ஏழை, பசியால் வாடும் மக்களுக்காக தனது சொத்துகளை வாரி வழங்கியவா்.

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா்., தேவா் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவித்து சட்டப்பேரவையில் அவரது உருவப் படத்தைத் திறந்துவைத்தாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, சென்னையில் தேவருக்கு வெண்கலச் சிலை அமைத்ததோடு, அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு 13 கிலோ தங்கக் கவசத்தை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கடந்த 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் ஒரே நேரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்களின் பேராதரவைப் பெற்றவா் தேவா். அவரது புகழுக்கு என்றும் நாம் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.