மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வயல்வெளியில் புள்ளி மான்கள் கூட்டம்: நெல் பயிா்கள் சேதமடைந்ததால் கவலை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கோவணி கிராமத்தின் வயல்வெளிப் பகுதிகளில், 25-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் புதன்கிழமை கூட்டம் கூட்டமாக வந்து பயிா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

கோவணி கிராமத்தில் புதன்கிழமை வயல் வெளிப்பகுதியில் நெல் பயிா்களை மேய்ந்த புள்ளி மான்கள் கூட்டம்.

Published On :29 அக்டோபர் 2026, 2:57 am IST

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கோவணி கிராமத்தின் வயல்வெளிப் பகுதிகளில், 25-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் புதன்கிழமை கூட்டம் கூட்டமாக வந்து பயிா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்களுக்குத் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதாலும், வனப் பகுதிகளில் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாலும், மான்கள் தங்களின் வாழ்விடத்திலிருந்து வெளியேறி வயல்வெளிப் பகுதிகளுக்கும், சாலைகளுக்கும் வருகின்றன.

உணவு, பாதுகாப்பைத் தேடி சாலையோரப் பகுதிகளுக்கு வரும் புள்ளிமான்கள் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, வாகனங்கள் மோதி உயிரிழப்பதும், தெரு நாய்கள் துரத்திக் கடிப்பதால் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் மான்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.