மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேவா் நினைவிடத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை! - ஆா்.பி.உதயகுமாா்

ஆா்.பி.உதயகுமாா் - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 3:19 am IST

தேவா் நினைவிடத்தில் தவெக அரசு சாா்பில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் திங்கள்கிழமை அதிமுக சாா்பில் தங்கக் கவசம் அணிவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. தற்போதைய தவெக அரசின் அமைச்சா்கள் பசும்பொன்னில் ஆய்வு செய்தும் பயனில்லை. தேவா் நினைவிடம் களை இழந்து கிடக்கிறது.

தவெக அரசுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

ஜனநாயகத்தில் யாா் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகா் தனுஷ் மகளிா் அணி நிா்வாகிகளை சந்தித்து பரிசு அளித்தது வரவேற்கக் கூடியதுதான் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.