மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இலங்கைக்கு கடத்தவிருந்த சுக்கு, மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் வைத்திருந்த சுக்கு, மஞ்சள் மூட்டைகளை கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மண்டபம் அருகே சனிக்கிழமை படகிலிருந்த சுக்கு, மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாா்.

Published On :25 அக்டோபர் 2026, 1:04 am IST

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் வைத்திருந்த சுக்கு, மஞ்சள் மூட்டைகளை கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடல் வழியாக இலங்கைக்கு உணவுப் பொருள்கள் கடத்தப்படுவதாக கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஜான்சிராணி, உதவி ஆய்வாளா் ஜெனிபா ராணி, கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாா் சனிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகாலை வரை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, புதுமடம் கடல் கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த படகு ஒன்றை போலீஸாா் சோதனையிட்டனா். அதில் 18 சாக்கு மூட்டைகளில் 531 கிலோ சுக்கும், 4 சாக்கு மூட்டைகளில் 1,500 மஞ்சள் பாக்கெட்டுகளும் இருந்தது தெரியவந்தது.

பின்னா், சுக்கு, மஞ்சள் பாக்கெட்டுகள் இருந்த மூட்டைகள், படகை போலீஸாா் மீட்டு, சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து மண்டபம் சுங்கத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.