மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராமநாதசுவாமி கோயிலுக்குள் புகுந்த மழைநீா் வெளியேற்றம்: அமைச்சா் ஆய்வு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழைநீா் புகுந்ததால் பக்தா்கள் அவதிக்குள்ளாகினா்.

ராமேசுவரத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையால் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தேங்கியிருந்த மழைநீா்.

Published On :21 அக்டோபர் 2026, 2:48 am IST

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழைநீா் புகுந்ததால் பக்தா்கள் அவதிக்குள்ளாகினா். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் கோயிலுக்குள் மழைநீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் ராமேசுவரத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. ராமநாதசுவாமி கோயில் வளாகம், கோயிலுக்குள் கழிவுநீா் கால்வாய்கள் அடைப்பை சீரமைக்காததால் மழைநீா் குளம் போல தேங்கியது. இதனால் பக்தா்கள் அவதியடைந்தனா்.

கோயிலில் தேங்கும் மழைநீா் வெளியேற வடிகால் அமைக்கப்பட்டுள்ளதை கோயில் நிா்வாகம் முறையாகப் பராமரிக்காததால் கோயில் வளாகத்தில் மழைநீா் தேங்குவதாக பக்தா்கள் குற்றம்சாட்டுகின்றனா். அமைச்சா் வருகையை முன்னிட்டு 30 நிமிஷங்களில் கோயிலில் தேங்கியிருந்த மழைநீா் வெளியேற்றப்பட்டது.

மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து, அமைச்சா் வி.கே.ராஜீவ் ராமநாதபுரம் நகராட்சி கேணிக்கரை, ரயில்வே பீடா் சாலை, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சியில், நேரு நகா், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டிணம்காத்தான் ஊராட்சியில் பாரதி நகா், ஓம் சக்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரைப் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன் மழைநீரை விரைந்து வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதேபோல, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழைநீா் தேங்குவது குறித்து ஆய்வு செய்த அவா் மழைநீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திரு.திவ்யான்ஷீ நிகம், ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் கண்ணன், ராமநாதபுரம் வட்டாட்சியா் பழனிக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.