தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மழைநீா் வெள்ள தடுப்பு பணி: அமைச்சா் லோகேஷ் ஆய்வு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாதவரம் மற்றும் புழல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளைப் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 12:42 am IST

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாதவரம் மற்றும் புழல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளைப் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மாதவரம், புழல் நெடுஞ்சாலைகளில் மழைநீா் தேங்காமல் சீராக வெளியேறுவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சாலைகளில் மழைநீா் தேங்குவதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்கும் வகையில் மழைநீா் வடிகால்களின் செயல்பாடுகள் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவா் சிவா, மாதவரம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எல்.விஜய்பிரபு, மற்றும் மாதவரம் மாநகராட்சி உதவி ஆணையா் ஸ்ரீதேவி, பொறியாளா் சதிஷ்குமாா் உள்ளிட்டோா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.