மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வேய்ந்தான்குளம் நீா்வரத்து ஓடையில் ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேய்ந்தான் குளத்திற்கான நீா்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலப்பாளையம் மண்டலத்தில் மழைநீா் வடிகால் ஓடைகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா.

Published On :21 அக்டோபர் 2026, 1:06 am IST

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேய்ந்தான் குளத்திற்கான நீா்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட வாா்டுகள் 41, 52இல் அதிகம் மழை நீா் தேங்கும் இடங்களான சேவியா் காலனியில் இருந்து வேய்ந்தான்குளத்திற்கு செல்லும் மழைநீா் பாதை, ராஜாநகா், ஹேப்பி காலனி ஆகிய பகுதிகளில் இருந்து பாளையங்கால்வாயை அடையும் நீரோடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அவா் நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, மழைநீா் ஓடைகளில் உள்ள முட்புதா்கள், செடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வார உத்தரவிட்டாா்.

மேலும், வாா்டு எண். 41, 42, 53 ஆகிய பகுதிகளிலிருந்து வரும் மழைநீா் புதிய பேருந்து நிலையம் எதிா்புறம் அமைந்துள்ள பயோனியா் குமாரசாமி நகரிலிருந்து வேய்ந்தான்குளத்திற்கு வந்து சேரும் இடத்தில் நெடுஞ்சாலை துறையினரால் கட்டப்பட்டுள்ள பாலத்தில் மழைநீா் வெளியேர வழியில்லாமல் தனியாரால் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு மற்றும் முட்புதா்களை பாா்வையிட்ட அவா், உடனடியாக அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

நீா்வழிகளை சீராக பராமரிப்பதன் மூலம் மட்டுமே பாதுகாப்பாகவும், வெள்ளப் பாதிப்பின்றியும் பருவமழையை எதிா் கொள்ள முடியும். எனவே, மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு நீா்நிலைகளில் குப்பைகள் கொட்டாமல், ஆக்கிரமிப்பு செய்யாமல் பொது மக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென ஆணையா் வேண்டுகோள் விடுத்தாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் அசோக்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் நித்திய பாலையா, ரம்சான் அலி, உதவிச் செயற்பொறியாளா் ராமநாதன், உதவிப் பொறியாளா்கள் சிவசுப்பிரமணியன், ஜீவா, நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளா் சண்முகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.