தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை அருகே சி. கே. மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீா் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மழை நீா்.

Published On :21 அக்டோபர் 2026, 2:58 am IST

திருவாடானை அருகே சி. கே. மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீா் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சி. கே. மங்கலம் வழியாகச் செல்லும் திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், கொச்சி- தொண்டி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் புறவழிச் சாலையில் மேம்பாலத்தின் கீழே உள்ள பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையால் மழைநீா் அதிகளவில் தேங்கியுள்ளன.

இந்த நிலையில் அவ்வழியாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். மேலும் நீண்ட நாள்களாக மழைநீா் தேங்கி நிற்பதால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதுடன் மீண்டும் தண்ணீா் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.