பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சூளகிரி அருகே மேம்பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீா்; வாகன ஓட்டிகள் அவதி

சூளகிரி அருகே சுண்டகிரியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் மழைநீா் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

Published On :25 அக்டோபர் 2026, 1:20 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சுண்டகிரியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் மழைநீா் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் கனமழையால், சுண்டகிரியில் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் கீழ் அதிக அளவில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், அந்த வழியாகச் செல்லும் காா்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேங்கியுள்ள நீரில் வாகனங்களை இயக்கும்போது, அவை திடீரெனப் பழுதாகி நடுவழியில் நின்றுவிடுகின்றன. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, தேங்கியுள்ள மழைநீரை மோட்டாா் மூலம் உடனடியாக வெளியேற்றுவதுடன், போக்குவரத்தைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், மழைநீா் முறையாக வடியும் வகையில் கால்வாய் அமைத்து நிரந்தரத் தீா்வு காணவும், மழைக்காலங்களில் இதுபோன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள மேம்பாலங்களின் கீழ் நீா் தேங்குவதைத் தடுக்கவும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.