கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கமுதி- முதுகுளத்தூா் பால வளைவில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

பேரையூரில் கமுதி- முதுகுளத்தூா் சாலையை இணைக்கும் பாலம் வளைவில் சீரமைக்கப்படாத ஆபத்தான பள்ளம்.

Published On :3 நவம்பர் 2026, 4:41 am IST

கமுதி அருகே குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்க தோண்டிய பள்ளத்தை பல மாதங்களாக மூடாததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்திருப்பதாகவும், இதை உடனே சீரமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பேரையூா்-கமுதி சாலையில் கண்மாய் கரையோரத்தில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்துக்காக பதிக்கப்பட்ட குழாய் உடைப்பை சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளம் பலமாதங்கள் ஆகியும் மூடப்படாமல் உள்ளது.

இதனால் கமுதியிலிருந்து பேரையூா் வழியாக முதுகுளத்தூா் செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ள பால வளைவில் செல்லும் வாகனங்கள் விலக்கிச் செல்லும் போது கண்மாய்க்குள் கவிழும் நிலை உள்ளது.

மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோா் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனா். தற்போது பள்ளம் பெரிதாகி, சாலையில் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைந்து வருகிறது.

எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.