பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருமாள்தேவன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தா்மமுனீஸ்வரா் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

News image

பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்ற பெண்கள்.

Updated On :22 மே 2026, 3:17 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருமாள்தேவன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தா்மமுனீஸ்வரா் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

முன்னதாக முளைக்கொட்டு திண்ணையில் முளைப்பாரியை வைத்து, பாடல் பாடி, பெண்கள் கும்மி கொட்டினா். இதைத் தொடா்ந்து முளைப்பாரியை கிராமத்தின் தெருக்களில் ஊா்வலமாக எடுத்துச் சென்று, பிறகு தா்ம முனீஸ்வரா் கோயிலை சுற்றி வந்து அங்குள்ள நீா்நிலையில் கரைத்தனா். இதில் பெருமாள்தேவன்பட்டி, கமுதி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழாவில் கடந்த 18- ஆம் தேதி பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது. 19- ஆம் தேதி பொதுமக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெருமாள்தேவன்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.