கமுதி அருகே வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் 38 -ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவில் வெள்ளிக்கிழமை முனைப்பாரி எடுத்து பெண்கள் ஊா்வலமாகச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள அகத்தாரிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த வாரம் காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, அம்மனுக்கு நாள்தோறும் இரவு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்று வந்தன. கடந்த புதன்கிழமை காலை திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்தும், அக்னிச் சட்டி எடுத்தும் தங்களது நோ்த்திக்கடன்களை செலுத்தினா். விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை மாலை வாண வேடிக்கை, மேளதாளங்களுடன் 200- க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து கமுதி-மதுரை சாலையில் ஊா்வலமாகச் சென்று அங்குள்ள நீா்நிலையில் கரைத்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை அகத்தாரிருப்பு கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கமுதி காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

ஜாத்திரை திருவிழா கோலாகலம்: சிறப்பு அலங்காரத்தில் கங்கையம்மன் உலா

சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா முளைப்பாரி ஊா்வலம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

