தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ராமநாதபுரம் அமமுக நிா்வாகிகள் ராஜிநாமா

அமமுக ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகிகள் தங்களது கட்சிப் பொறுப்புகளிலிருந்து ராஜிநாமா செய்தனா்.

News image
Updated On :22 மணி நேரங்கள் முன்பு

அமமுக ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகிகள் தங்களது கட்சிப் பொறுப்புகளிலிருந்து ராஜிநாமா செய்தனா்.

இது குறித்து அந்தக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் மு.முருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை சந்தித்ததன் விளைவாக ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட அமமுக தொண்டா்கள், நிா்வாகிகளின் வேண்டுகோளின் படி, நான் வகித்து வந்த ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். மேலும், ராமநாதபுரம் மாவட்ட அமமுக ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளைச் செயலா்கள் தாங்கள் வகித்து வந்த பதவிகளை ராஜிநாமா செய்து, அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்தும் ஒட்டு மொத்தமாக விலகுவதாக கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.