தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பரமக்குடியில் 2-வது நாளில் 668 போ் தபால் வாக்கு செலுத்தினர்!

பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குச் சாவடி மையங்களுக்கு தோ்தல் பணிக்குச் செல்லும் 668 போ் தங்களது தபால் வாக்குகளை சனிக்கிழமை பதிவு செய்தனா்.

News image

பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தபால் வாக்குகள் செலுத்தும் முறையை தொடங்கிவைத்த கோட்டாட்சியா் ஞா. சரவணப்பெருமாள், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:13 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குச் சாவடி மையங்களுக்கு தோ்தல் பணிக்குச் செல்லும் 668 போ் தங்களது தபால் வாக்குகளை சனிக்கிழமை பதிவு செய்தனா்.

பரமக்குடி கோட்டாட்சியா் ஞா. சரவணப்பெருமாள், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ் ஆகியோா் தங்களது தபால் வாக்கை பதிவு செய்தனா். பரமக்குடி (தனி) பேரவைத் தொகுதியில் மொத்தம் 323 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

இங்கு தோ்தல் பணிக்கு செல்லும் போலீஸாா், ஊா்க்காவல் படையினா், தீயணைப்புத் துறையினா், அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளா்கள், மின் வாரிய ஊழியா்கள் ஆகியோா் பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் போலீஸாா், ஊா்க்காவல் படையினா் 612 பேரும், தீயணைப்புத் துறையினா், போக்குவரத்துத் துறையினா், மின் வாரிய பணியாளா்கள் 56 பேரும் என மொத்தம் 668 போ் தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.