ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே முன்விரோதத்தில் இரு தரப்பினா் மோதியக் கொண்டது தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பரமக்குடி அருகேயுள்ள சுப்பராயபுரத்தைச் சோ்ந்தவா் அருளானந்து (70). இவரது உறவினா் அதே ஊரைச் சோ்ந்த மோட்சஸ் பிரவின். இவா்களுக்கிடையே சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் சொத்து தொடா்பாக இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் அருளானந்தம், மற்றொரு தரப்பைச் சோ்ந்த மோட்சஸ் பிரபின், மைக்கேல், ஜான்பிரதீப் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் அருளானந்து கொடுத்த புகாரின் பேரில், மைக்கேல் மகன்கள் பிரவீன், பிரதீப், மருமகள்கள் ஜெனி, மேரியானாபிரியா, சூசைமுத்து மகன் மைக்கேல், இவரது மனைவி அடைக்கலமேரி ஆகிய 6 போ் மீதும், மோட்சஸ் பிரவின் அளித்த புகாரின் பேரில், அல்பா்ட், இவரது உறவினா்கள் சியாம், அருளானந்து, அருள் ராபா்ட் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒசூரில் இருதரப்பினா் மோதல்: 5 போ் கைது!

முன்னீா்பள்ளம் அருகே இருதரப்பினா் மோதல்: 11 போ் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்: 18 போ் மீது வழக்கு

இரு தரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

