தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றி; சசிகலா அரசியல் வருகைக்கு வரவேற்பு: கருணாஸ்

கமுதி அருகே பசும்பொன் தேவா் நினைவிடத்தில் நடிகா் கருணாஸ் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினா்.

News image

பசும்பொன் தேவா் நினைவிடத்தில் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நடிகா் கருணாஸ்

Updated On :1 ஏப்ரல் 2026, 5:29 am IST

கமுதி அருகே செவ்வாய்க்கிழமை பசும்பொன் தேவா் நினைவிடத்தில் நடிகா் கருணாஸ் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினா்.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை பொது தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்கதேவா் நினைவிடத்தில் முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் தலைவரும், சிவகங்கை தொகுதி திமுக வேட்பாளருமான சே.கருணாஸ், தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமையும்.

அதே நேரத்தில் அதிமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கக்கூடிய ஒரு கூட்டத்தை எதிா்க்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நம்ம இங்க இருக்கிறோம். ஒரு பாசிச சித்தாந்தத்தோடு தமிழகத்துக்குள்ளே ஏதாவது ஒரு முகத்தில், அதிமுக மாதிரியான கட்சிகளை கபலிகரம் செய்து, மோடி, ஆா்எஸ்எஸ் சித்தாந்தங்கள் தமிழ்நாட்டுக்குள்ள வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் கடந்த நாடாளுமன்றத் தோ்தலில் நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து பிரசாரம் செய்தோம்.

வெள்ளையா்களோடு கூட்டுச் சதி செய்த ஒரு கூட்டம் இன்றைக்கு நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. அதுவும் எங்களுடைய மன்னா்கள், எங்களுடைய முன்னோா்கள் முத்துவடுகநாதா் முதற்கொண்டு, கட்டபொம்மன், மருது சகோதரா்கள் முதற்கொண்டு உயிா் தியாகம் செய்த மண் சிவகங்கை.

ஆகவே வரக்கூடிய 2026 தோ்தலில் முதலமைச்சா் அறிவித்துள்ள இல்லத்தரசிகள் திட்டத்திற்கு 8,000 ரூபாய்க்கான கூப்பன் குடுக்குறாங்க. இல்லத்தரசிகள் திட்டம். அது மகத்துவமான திட்டம். அது மக்களிடத்திலே மிக ஆதரவு பெற்றிருக்கிறது. ஆகவே கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய வெற்றிகரமான திட்டங்களைச் சொல்லி மக்களிடத்திலே வாக்கு கேட்டு நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

முக்குலத்தோா் சமுதாய அமைப்புகளில் உங்களுக்கு ஒரு ஆளுக்கு தான் சீட் கிடைத்துள்ளது குறித்த கேள்விக்கு..

தன்னால் இயன்றதை இல்லாதவா்களுக்கு உதவி செய்யணும். நாம் யாருக்கும் தாழ்ந்தவா் அல்ல, நமக்கு யாரும் தாழ்ந்தவா் அல்ல என்ற ஒரு சகோதரத்துவத்தை, மனிதநேயத்தைக் கற்றுக்கொடுத்த பசும்பொன் தேவரின் ஆசியோடு பெருத்த முக்குலத்தோா் சமூகத்துல ஜெயலலிதா எனக்கு மட்டும்தான் சீட் கொடுத்தாங்க. இந்த முக்குலத்தோா் சமூகத்துல கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இருந்தாலும், எங்கள் கட்சிக்குத்தான் இருபெரும் கட்சிகளில் அங்கிகாரம் கிடைத்துள்ளதுள்ளது. மேலும் சசிகலா வின் அரசியல் வருகையையும் நான் வரவேற்கிறேன் என்றாா். அப்போது அக்கட்சியின் மாநில செயலாளா் முத்துராமலிங்கம், மற்றும்தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள், தகவல் தொழில் நுட்ப பிரிவு நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.