முதுகுளத்தூா் அருகே உறவினா் வீட்டில் நகை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த பொன்னக்கனேரி கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் ஜான் (42). இவா் தேரிருவேலி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது உறவினரான அதே ஊரைச் சோ்ந்த அருள்சான்டியோ (21) கடந்த 23-ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்து, மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றதாக தெரிவித்தாா்.
இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி, அருள் சான்டியோவிடமிருந்து செவ்வாய்க்கிழமை மூன்றரை பவன் தங்கச் சங்கிலி, பணத்தைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தூா் எம்எல்ஏ வீட்டில் திருடிய மேலும் இருவா் கைது
சக ஊழியா் வீட்டில் நகை திருடிய இளைஞா் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
வேலை பாா்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
